தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி பயிற்றுவிப்பாளராக கிப்சன் நியமனம்

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி பயிற்றுவிப்பாளராக கிப்சன் நியமனம்

1 mins read

கேப்டவுன்: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆட்டக்காரர் ஒட்டிஸ் கிப்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய பயிற்றுவிப்பாள ரான ரஸ்சல் டோமின்கோவின் பதவி காலம் இம்மாதம் முடிவுக்கு வருகிறது. 48 வயது கிப்சன், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இரண்டு டெஸ்ட்டுகளிலும் 15 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்து தற்போது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சுப் பயிற்று விப்பாளராக இருந்து வருகிறார். இம்மாதம் பங்ளாதே‌ஷுக்கு எதிராக நடைபெறும் இரண்டு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் தென்னாப் பிரிக்க அணியின் பயிற்றுவிப்பாள ராக கிப்சன் இணைய இருக்கி றார். "தென்னாப்பிரிக்க அணியின் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்ற ஆவலுடன் காத்துக்கொண்டிருக் கிறேன்' என்று கிப்சன் தெரி வித்துள்ளார்.