பார்கே: உலகக் கிண்ணக் காற்பந்துத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஜெர்மனி தொடர் வெற்றியைப் பதிவு செய்து வருகிறது. இதனால் ஜெர்மனி உலகக் கிண்ணப் போட்டியில் விளை யாடுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. 'சி' பிரிவில் நடந்த ஆட்டத்தில் செக் குடியரசை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது ஜெர்மனி. நான்காவது நிமிடத்திலேயே முதல் கோலை புகுத்தி முன்னிலை பெற்றது ஜெர்மனி. மெசுட் ஒசில் கொடுத்த பந்தை திமோ வெர்னர் கோலாக மாற்ற அதை 78 நிமிடத்தில் சமன் செய்தார் செக் குடியரசின் டர்டியா. 88வது நிமிடத்தில் ஜெர்மனியின் ஹம்மல்ஸ் அடுத்த கோலைப் போட 2=1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது ஜெர்மனி. வரும் செவ்வாய் கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில் நார்வே குழுவை எதிர்கொள்கிறது பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஜெர்மனி. இதே பிரிவின் மற்றோர் ஆட்டத்தில் 0=3 என்ற கணக்கில் சான் மரினோவை வீழ்த்திய வடக்கு அயர்லாந்து பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. திங்கட்கிழமை நடைபெற வுள்ள செக் குடியரசிற்கு எதிரான ஆட்டத்தைச் சமன் செய்தாலேயே போதும் வடக்கு அயர்லாந்து தனது இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
ஜெர்மனி தொடர் வெற்றி
1 mins read

