அட்டர்ட்: மால்டாவின் திறன் மிக்க தடுப்பாட்டத்தை உடைத்து பிற்பாதி ஆட்டத்தில் கோல் களைப் புகுத்திய இங்கிலாந்து உலகக் கிண்ணக் காற்பந்துத் தகுதிச்சுற்றுக்கான பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கான உலகக் கிண்ணத் தகுதிச்சுற்று போட்டிகளில் 'எஃப்' பிரிவில் மால்டா குழுவை அதன் சொந்த மண்ணில் எதிர்த்து விளை யாடியது இங்கிலாந்து குழு. முற்பாதி ஆட்டத்தில் இரு குழுக்களுமே கோல் எதுவும் போடவில்லை. ஆனால், கோல் போடுவதற் காக தொடர்ந்து போராடிய இங்கிலாந்தின் முயற்சிக்கு 53வது நிமிடத்தில்தான் பலன் கிடைத்தது. டெலி அலி கொடுத்த பந்தை ஹேரி கேன் கோலாக மாற்ற இங்கிலாந்தின் கோல் கணக்கு தொடங்கியது. ஆட்டம் முழுவதும் இங்கி லாந்தை கோல் போடவிடாமல் தடுத்து வந்த மால்டா குழுவினர் கடைசி நேரத்தில் சோர்வடைந் தனர். எனவே, இங்கிலாந்து கோல் மழை பொழியத் தொடங் கியது.
கடும் சவாலாக இருந்த மால்டாவின் தடுப்பாட்டத்தை உடைத்து முதல் கோலை புகுத்தினார் இங்கிலாந்தின் ஹேரி கேன் (இடது). படம்: ஏஎஃப்பி

