ஆறுதல் வெற்றி பெறத் துடிக்கும் இலங்கை

ஆறுதல் வெற்றி பெறத் துடிக்கும் இலங்கை

2 mins read
c41e3da3-c896-4d1f-947b-abd4abf9cb06
-

கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான இன்றைய கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆறுதல் வெற்றி பெறத் துடிக்கிறது இலங்கை அணி. அண்மையில் செய்தியாளர்களி டம் பேசிய இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மேத்யூஸ், இலங்கை அணிக்கு நல்ல திறமை இருக்கிறது. ஆனால் நம்பிக்கை குறைவாக இருப்பதே தற்போதைய பிரச்சினையாக உள்ளது என்றார். இலங்கை அணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில் பேசிய அவர், "இலங்கை அணி வீரர்கள் தொடர் தோல்வி யால் மிகவும் ஏமாற்றமடைந்து உள்ளனர். "இதே அணியை வைத்துக் கொண்டு இரு மாதங்களுக்கு முன்னர் நடந்த வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் 322 ஓட்டங்கள் என்ற இலக்கை தொட்டு வெற்றி பெற்றோம்.

"எங்களிடம் திறமை இல்லாமல் இல்லை. ஆனால் அணியினரிடம் நம்பிக்கை குறைவாக இருப்பதே தற்போதைய பிரச்சினையாக உள் ளது. "வெற்றியாளர் கிண்ணத் தொடரில் விளையாடிய ஆறு வீரர் கள் காயம் காரணமாக இந்தியா வுடனான தொடரில் விளையாட வில்லை. இது எங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. "இலங்கை தொடர் தோல்வி அடைந்து வரும் நிலையில், ஒரே ஒரு வெற்றி தற்போது எங் களுக்குத் தேவைப்படுகிறது. "அது மட்டும் கிடைத்தால் நிச்சயம் இலங்கை அணி தன் னம்பிக்கை பெற்றுவிடும்," எனச் சொன்னார். இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை அணி, நிலையான ஆட் டத்தை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறது. பந்துவீச்சும் குறிப்பிடும்படியாக இல்லை. இந்தக் குறைகளைச் சரி செய்து ஆறுதல் வெற்றி பெற இலங்கை முயற்சிக்கும்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் டோனி, இலங்கை பந்தடிப்பாளர் மேத்யூஸ். இலங்கையை மீண்டும் 'ஒயிட்வாஷ்' செய்யும் ஆர்வத்தில் உள்ளது இந்திய அணி. படம்: ஏஎஃப்பி