நடுவரைத் திட்டியதால் போட்டியைவிட்டு வெளியேற்றப்பட்டார்

நடுவரைத் திட்டியதால் போட்டியைவிட்டு வெளியேற்றப்பட்டார்

1 mins read
f0e3a47a-9ed6-4a97-9e38-d8892dcb8da7
-

நியூயார்க்: அமெரிக்கப் பொது விருது டென்னிஸ் தொடரில் நடு வரை நோக்கி தகாத சொற்களைக் கூறியதற்காக இத்தாலிய டென் னிஸ் வீரரான ஃபேபியோ ஃபோக்னினி அத்தொடரைவிட்டு வெளியேற்றப்பட்டார். உலகத் தரவரிசையில் 26வது இடத்தில் இருக்கும் ஃபோக்னினி ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் சக நாட்டவரான ஸ்டெஃபானோ ட்ரவக்லியாவிடம் தோல்வியடைந்தார். ஆயினும் இரட்டையர் பிரிவில் அவர் 3ஆம் சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இருந்தபோதும் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றின்போது சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஆட்ட நடுவரை அவமதிக்கும் வகையில் அவர் தகாத சொற்களைப் பயன்படுத்தி யதாகச் சொல்லப்பட்டது.

விசாரணையில் அது உறுதி செய்யப் பட, ஃபோக்னினி தொடரை விட்டே நீக்கப்பட்டார். அத்துடன், அவருக்கு 24,000 அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. ஃபோக்னினி இப்படி நடந்து கொண்டது இது முதல்முறை அல்ல. இந்நிலையில், தமது செயலுக்கு டுவிட்டர் மூலமாக ஃபோக்னினி மன்னிப்புக் கோரியுள்ளார். இதற்கிடையே, தவறிழைத்த ஃபோக்னினியை அப்போதே வெளியேற்றி இருக்கவேண்டும் என்றும் போட்டி நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு அவ்வாறு செய்தது அதிகாரிகளின் தவறு என்றும் உலகின் முதல்நிலை வீரர் ரஃபாயல் நடால் கருத்துத் தெரி வித்துள்ளார்.

ஆட்ட நடுவரைத் தகாத சொற்களால் பழித்த இத்தாலிய டென்னிஸ் வீரர் ஃபேபியோ ஃபோக்னினி. படம்: ராய்ட்டர்ஸ்