விமர்சிப்பதை நிறுத்துங்கள் - மெசுட் ஓஸில்

விமர்சிப்பதை நிறுத்துங்கள் - மெசுட் ஓஸில்

1 mins read
7e4603f0-790b-4e31-84e6-36dad7b8269d
-

லண்டன்: தன்னையும் தான் பிரதிநிதிக்கும் ஆர்சனல் காற் பந்துக் குழுவையும் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜெர்மானியரான மெசுட் ஓஸில் (படம்). 2013ஆம் ஆண்டில் ஸ்பெயி னின் ரியால் மட்ரிட் குழுவில் இருந்து விலகி ஆர்சனல் குழு வுடன் இணைந்ததில் இருந்தே ஓஸிலின் செயல்பாடு குறித்தும் உடற்தகுதி குறித்தும் அவ்வப் போது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், எல்லாவற்றுக் கும் தன்னையே குற்றம் சாட்டு வதை விட்டுவிட்டு தனக்கு ஆதரவு தரும்படி சமூக ஊடகங்கள் வழி யாக அவர் கேட்டுக்கொண்டுள் ளார்.

"தனிப்பட்ட முறையில், லண் டனுக்கு வந்தது முதலே அதிக மான விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகி விட்டது. 'இவருக்குக் கொடுக்கப் பட்ட விலை அதிகம், பேராசைக் காரன், போராடும் குணமற்றவன்' = இதுதான் மற்றவர்கள் என் மீது வைக்கும் விமர்சனம். என் னைப் பற்றித் தெரியாத, தங்களது காலத்தில் வெற்றிகரமாக விளங் கிய மற்றும் சோபிக்கமுடியாத சிலரும் அவ்வாறு கூறி வருகின் றனர். விமர்சனம் என்பது எல்லா காற்பந்து வீரர்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். முன்பு சகாப்தங்களாக விளங்கியவர்கள் சகாப்தங்கள் போலவே நடந்து கொள்வர் என்று நான் எதிர் பார்த்தேன். ஆனால், அப்படி நடக்கவில்லை. இந்த நிலையில், அவர்கள் இனியும் தொடர்ந்து விமர்சிக்காமல் ஆதரவு அளிக்கத் தொடங்கவேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை," என்று ஓஸில் தெரிவித்துள்ளார்.