மட்ரிட்: மத்திய திடல் ஆட்டக்காரர் இஸ்கோ இரு கோல்களை அடிக்க, இத்தாலியை 3=0 என்ற கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் காற்பந்துக் குழு உலகக் கிண்ண இறுதிச் சுற்றுப் போட்டிகளுக்கான வாய்ப்பை நெருங்கி இருக்கிறது. பிரத்தியேக தாக்குதல் ஆட்டக் காரர் யாரையும் ஸ்பெயின் களம் இறக்காதபோதும் முற்பாதியின் 13ஆம் நிமிடத்தில் 'ஃப்ரீ கிக்' மூலம் அற்புதமாக கோலடித்து தமது அணியை முன்னிலை பெறச் செய்தார் ரியால் மட்ரிட் குழுவிற் காக விளையாடி வரும் இஸ்கோ. ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் அவர் மூலம் ஸ்பெயின் இன்னொரு கோலையும் போட்டது. பிற்பாதியில் மாற்று ஆட்டக்கார ராகக் களமிறங்கிய, இப்பருவத்தில் செல்சி குழுவுடன் இணைந்த அல் வேரோ மொராட்டா தன் பங்குக்கு ஒரு கோலை அடித்து ஸ்பெயினின் வெற்றியை உறுதி செய்தார். 2006ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி தோற் றிருப்பது இதுவே முதன்முறை.
இத்தாலிக்கு எதிரான உலகக் கிண்ணக் காற்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் தமது இரண்டாவது கோலைப் புகுத்துகிறார் ஸ்பானிய ஆட்டக்காரர் இஸ்கோ (இடது). படம்: ராய்ட்டர்ஸ்

