தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை ரூ.16,000 கோடிக்கு ஏலம் எடுத்தது ஸ்டார் இந்தியா

1 mins read

மும்பை: ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்ட 2008ஆம் ஆண்டு முதல் 10வது சீசன் வரை அதன் ஒளிபரப்பு உரிமத்தை சோனி நிறுவனம் வைத்திருந் தது. இதையடுத்து அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் உரிமத்துக்கான ஏலம் நேற்று முன் தினம் நடை பெற்றது. மும்பையில் பிசிசிஐ நடத்திய இந்த ஏலத்தில் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன. 2018 முதல் 2022 வரையில் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை 'ஸ்டார் இந்தியா' நிறுவனம் ரூ.16,347.50 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ஐபிஎல் ஏற்கெனவே 'ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்' மூலம் கிரிக்கெட் வாரியம் ரூ.2,199 கோடி பெற்று இருந்தது. முன்னதாக இந்த ஏலம் கடந்த 28ஆம் தேதி நடைபெற இருந்தது. உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால் இந்த ஏலம் தாமதம் ஆனது. உச்ச நீதிமன்றம் ஏலத்தை நடத்த அனுமதி அளித்ததைத் தொடர்ந்து செப்டம்பர் 4ஆம் தேதிக்கு ஏலம் நடத்தப்பட்டது.