வாஷிங்டன்: 'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்கப் பொது விருது டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற நான்காவது சுற்றுப் போட்டியில் ரஃபாயல் நடாலும், உக்ரேனின் அலெக்சாண்டர் டோல்கோபோலோவும் மோதினர். இப்போட்டியில் நடால் 6-2, 6-4, 6-1 என்று வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த நான்காம் சுற்றுப் போட்டியில் முதல்நிலை வீராங்கனையான பிலிஸ்கோவா, அமெரிக்காவின் பிராடியை எதிர்கொண்டார். இப்போட்டி யில் பிலிஸ்கோவா 6-1, 6-0 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றார்.
டென்னிஸ்: நடால், பிலிஸ்கோவா காலிறுதிக்கு முன்னேற்றம்
1 mins read

