பின்னர் மீண்டு வந்த இங்கிலாந்து நேற்று அதிகாலை நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்து தகுதிச் சுற்று ஆட்டமொன்றில் ஸ்லோவாக்கியாவை 2=1 என்ற கோல் எண்ணிக்கையில் தோற் கடித்தது. முதல் பாதி ஆட்டத்தில் விறுவிறுப்பில்லாத ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத் திலேயே ஸ்லோவாக்கியாவை முதல் கோல் போட அனுமதித்தது. இதில் தன் வசம் இருந்த பந்தை எதிரணியினர் கைப்பற்றி இங்கிலாந்துக்கு எதிராக கோல் போட காரணமாக விளங்கினார் மான்செஸ்டர் யுனைடெட்டின் இளம் வீரர் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட். ஆனால், இவரோ பின்னர் தம்மீது விழுந்த களங்கத்தை துடைக்கும் வண்ணம் இங்கிலாந்து அணி ஸ்லோவாக்கியாவுக்கு எதி ராக அடித்த இரண்டு கோல்களிலும் தமது திறமையை வெளிப்படுத்தினார்.
ஸ்லோவாக்கியாவுக்கு எதிரான முதல் கோல் ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் வந்தது. அதில் கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி ஸ்லோவாக்கியா கோல் கம்பத் துக்கு மிக அருகில் பந்தை அனுப்பி இங்கிலாந்துக்கான முதல் கோல் போட எரிக் டையர் வழிவகுத்தார். பின்னர், இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் 59ஆம் நிமிடத்தில் அற்புதமான முறையில் பந்தை கோல் கம்பத்தின் வலது பக்க ஓரத்தில் செலுத்தி இங்கி லாந்து அணியின் இரண்டாவது கோலையும் அதன் வெற்றி கோலையும் பெற்றுத் தந்தார். எனினும், இந்த இரண்டு கோல்களையும் தவிர்த்துப் பார்த்தால் இங்கிலாந்து அணியின் ஆட்டம் நம்பிக்கை தரும் விதத்தில் அமையவில்லை என்று காற்பந்து விமர்சகர்களும் ரசிகர்களும் கூறுகின்றனர்.
நேற்று அதிகாலை லண்டனில் நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஸ்லோவாக்கியாவுக்கு எதிரான இரண்டாவது கோலை போட்ட மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் (வெள்ளைச் சீருடையில் இடமிருந்து இரண்டாவது). படம்: ராய்ட்டர்ஸ்

