விராத் கோஹ்லி: டெண்டுல்கரின் சாதனை பற்றி சிந்திக்கவில்லை

விராத் கோஹ்லி: டெண்டுல்கரின் சாதனை பற்றி சிந்திக்கவில்லை

1 mins read

கொழும்பு: ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் எடுத்துச் சாதனை படைத்த வீரராக டெண்டுல்கர் உள்ளார். அவர் 452 இன்னிங்சில் 49 சதம் அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக விராத் கோஹ்லி 30 சதம் அடித்து (186 இன்னிங்ஸ்) ரிக்கி பாண்டிங்குடன் இணைந்து 2வது இடத்தில் உள்ளார். 30 சதங்களை அதிவேகமாக எடுத்த சாதனையாளராக கோஹ்லி இருக்கிறார். இலங்கைக்கு எதி ராக 2 சதம் அடித்த அவர் அதே அதிரடியுடன் ஆடினால் டெண்டுல்கர் சாதனையை முறியடிப்பார். இது குறித்து விராத் கோஹ்லி கூறும்போது, "டெண்டுல்கரின் சாதனையைப் பற்றி நான் சிந்திக்கவில்லை," என்றார்.