குறைந்த வயதில் காலிறுதிக்குள் நுழைந்த வீரர்

குறைந்த வயதில் காலிறுதிக்குள் நுழைந்த வீரர்

1 mins read

நியூயார்க்: அமெரிக்கப் பொது விருது டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் ரஷ்யாவைச் சேர்ந்த 19 வயது வீரர் ஆந்த்ரே ருப்லெப் காலிறு திக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். ஆந்த்ரே ருப்லெவ் 7-5, 7-6 (7-5), 6-3 என்ற நேர்செட்டில் உலகத் தர வரிசையில் 14வது இடத்திலுள்ள டேவிட் கோபினை வீழ்த்தி அதிர்ச்சி அளித்து காலிறுதிக்­குள் அடியெடுத்து வைத்தார். இதன்மூலம் 2001ல் காலிறுதிக்கு முன்னேறிய ஆன்டி ரோட்டிக் குக்கு அடுத்தபடியாக காலிறு திக்குத் தகுதி பெற்ற இளம் வீரர் என்ற பெருமையை ஆந்த்ரே ருப்லெவ் பெற்றார்.