ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி; அரையிறுதியில் டெல் போட்ரோ

ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி; அரையிறுதியில் டெல் போட்ரோ

1 mins read
b79750b1-7b7c-4f1e-8681-bce2fd337ee9
-

வா‌ஷிங்டன்: டென்னிஸ் நட்சத் திரம் ரோஜர் ஃபெடரர் அர்ஜெண்டினா வீரர் டெல் போட்ரோவிடம் (படம்) தோல்வி அடைந்தையடுத்து அமெரிக்க பொது விருது தொடரில் இருந்து வெளியேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரி வின் காலிறுதி ஆட்டத்தில் தர வரிசையில் மூன்றாவது இடத் தில் இருக்கும் ரோஜர் ஃபெடரர், அர்ஜெண்டினாவின் டெல் போட்ரோவை எதிர்கொண்டார். போட்ரோ முந்தைய போட்டி யில், ஆறாம் நிலை வீரரான டோம்னிக்கைத் தோற்கடித்துக் காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந் தார். காலிறுதிப் போட்டியின் முதல் செட்டை அர்ஜெண்டினா வீரர் டெல் போட்ரோ 7-5 எனக் கைப்பற்றினார். அடுத்த செட்டில் அதிரடியாக விளை யாடிய ஃபெடரர் 6-3 எனக் கைப்பற்றினார். ஆனால் அடுத்த இரண்டு செட்களையும் 7-6, 6-4 என மீண்டும் டெல் போட்ரோவே கைப்பற்றினார். எனவே, மூன்று செட்களை கைப்பற்றிய டெல் போட்ரோ அரையிறுதிக்குத் தகுதி பெற் றார். அதிர்ச்சி தோல்வியடைந்த ஃபெடரர் தொடரைவிட்டு வெளியேறினார். அரையிறுதிப் போட்டியில் டெல் போட்ரோ முதல் நிலை வீரரான ரஃபாயல் நடாலை எதிர்கொள்ள இருக்கிறார்.