13 விக்கெட்டுகளை கைப்பற்றிய நேதன் லயன்

13 விக்கெட்டுகளை கைப்பற்றிய நேதன் லயன்

1 mins read

சிட்டகாங்: பங்ளாதேஷ், ஆஸ்தி ரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயன் 13 விக்கெட்டுகளை வீழ்த் தினார். அவர் முதல் இன் னிங்சில் ஏழு விக்கெட்டுகளை யும் 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன் மூலம் ஆசிய கண்டத் தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையைப் பெற்று உள்ளார் லயன். இதற்கு முன், கடந்த பிப்ரவரியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஓகீஃப் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.