லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டமொன்றில் மான் செஸ்டர் சிட்டி, லிவர்பூல் குழுக்கள் சிங்கப்பூர் நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு மோதுகின்றன. இவ்விரு குழுக்களும் தலா ஏழு புள்ளிகளுடன் பட்டியலின் முதல் நான்கு இடங்களுக்குள் இருப்பதால் இன்றைய ஆட்டம் மிக விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இபிஎல் பட்டத்தை வெல்ல இந்த இரண்டு குழுக்களில் யாருக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பதைத் தீர்மானிப்பதாக இந்த போட்டி இருக்கும் என்று காற்பந்து விமர்சகர்கள் கருதுகின்றனர். மான்செஸ்டர் சிட்டிக்குச் சொந்தமான எட்டிஹாட் அரங்கில் இந்தப் போட்டி நடக்கிறது.
இந்தப் பருவத்தில் தனது சொந்த அரங்கில் நடந்த முதல் ஆட்டத்தில் எவர்ட்டன் குழுவுடன் சிட்டி சமநிலை கண்டது. ஆகை யால், இன்றைய ஆட்டத்தில் வென்று இந்தப் பருவத்தில் சொந்த அரங்கில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்ய சிட்டி ஆர்வமாக உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் தனது ஆன்ஃபீல்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் நான்கு கோல்களைப் போட்டு ஆர்சனல் குழுவை நசுக்கிய லிவர்பூல் குழு, இன்று சிட்டிக்கு எதிராகவும் அதே போன்றதொரு செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றியை அறு வடை செய்யும் முனைப்புடன் இருக்கிறது. ஆர்சனலுக்கு எதிரான போட்டி யில் விளையாடிய அதே ஆட்டக் காரர்களையே லிவர்பூல் நிர்வாகி யர்கன் க்ளோப் இன்றைய ஆட்டத் திலும் களமிறக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

