இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்

இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்

1 mins read

புதுடெல்லி: இந்திய மகளிர் ஹாக்கி அணிக்குப் பயிற்றுவிப்பாளராக இருந்து வரும் ஷோர்ட் மரின் அந்நாட்டு ஆடவர் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார். ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் மகளிர் அணியுடன் சென்றுள்ள மரின் இம்மாதம் 20ஆம் தேதியில் இருந்து ஆடவர் அணிக்குப் பயிற்சியளிப்பார். அத்துடன், உலகக் கிண்ணம் வென்ற இந்திய இளையர் அணியின் பயிற்றுவிப்பாளராகச் செயல்பட்ட ஹரேந்திர சிங் தேசிய மகளிர் அணியின் உயர் செயல்திறன் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய விளையாட்டுத் துறை அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்ற ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தமது டுவிட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.