சென்னையில் முதல் போட்டி

சென்னையில் முதல் போட்டி

1 mins read

புதுடெல்லி: பங்ளாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரைச் சமன் செய்த கையோடு இந்தியா செல்லும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஐந்து ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது. இந்திய=ஆஸி. அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இம்மாதம் 17ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. அதன்பின் 21, 24, 28, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மற்ற ஒருநாள் போட்டிகளும் அக்டோபர் 7, 10, 13 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளும் நடக்கின்றன. அதன்பின் இந்தியா செல்லும் நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.