நியூயார்க்: அமெரிக்கப் பொது விருதுப் பட்டம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் வீனஸ் வில்லி யம்ஸ் அரையிறுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டு வெளியேறினார். சக நாட்டவரான ஸ்லோவன் ஸ்டீஃபன்ஸ் (படம்) 6-1, 0-6, 7-5 என்ற செட் கணக்கில் வீனசை வீழ்த்தினார். இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 11 மாத இடைவெளிக்குப் பிறகு கடந்த ஜூலையில்தான் மீண்டும் டென்னிஸ் திடலில் கால்பதித் தார் ஸ்டீஃபன்ஸ். உலகத் தரவரிசையில் 83வது நிலையில் உள்ள ஸ்டீஃபன்ஸ் பத்து முறை கிராண்ட் ஸ்லாம் வெற்றியாளரான வீனசைத் தோற்கடித்ததன் மூலம் உலக டென்னிஸ் ரசிகர்களைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத் துள்ளார். இன்று நடக்கவுள்ள இறுதி ஆட்டத்தில் இன்னோர் அமெ ரிக்கரான மேடிசன் கீஸை அவர் எதிர்த்தாடவுள்ளார். அரையிறுதியில் சக நாட்ட வரான கோகோ வேண்டவேயை 6=1, 6=2 என மிக எளிதாக வென்றார் கீஸ். ஸ்டீஃபன்ஸ், கீஸ் ஆகிய இருவரும் கிராண்ட் ஸ்லாம் தொடர் ஒன்றின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருப்பது இதுவே முதன்முறை.
இதற்கிடையே, பெண்கள் இரட்டையர் பிரிவில் சீனாவின் ஷுவாய் பெங்குடன் இணைந்து விளையாடி வரும் இந்தியாவின் சானியா மிர்சா அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். காலிறுதியில் இந்திய-சீன இணை, ஹங்கேரியின் டிமியா பாபோஸ்=செக் குடியரசின் ஆண்ட்ரியா ஹிலவக்கோவா இணையை 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. படம்: ஏஎஃப்பி

