சுரேஷ் ரெய்னா: கடும் பயிற்சி மூலம் மீண்டு வருவேன்

சுரேஷ் ரெய்னா: கடும் பயிற்சி மூலம் மீண்டு வருவேன்

1 mins read

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரராகத் திகழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா. குறிப்பாக டி20 போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத் தக் கூடியவர். அண்மைக்காலமாக இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வில்லை. இலங்கை தொடரில் இடம் கிடைக்கும் என்று எதிர் பார்த்தார். ஆனால் மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ் ஆகியோர் இடம்பிடித்ததால் ரெய்னாவிற்கு இடம் கிடைக்கவில்லை. யுவராஜ் சிங்கும் அணியில் இடம்பெற வில்லை. இருவரும் இடம்பிடிக் காததற்கு உடற்தகுதிதான் கார ணம் என்று கூறப்பட்டது. இத னால் சுரேஷ் ரெய்னா கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவர் துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். "இந்திய அணியில் இடம் பெறுவதற்காக கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். "அதனால் நிச்சயம் அணிக்கு மீண்டும் திரும்புவேன் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது," என்று ரெய்னா கூறினார்.