எஸ் லீக் தொடருக்கான நிதி பாதியாகக் குறைப்பு

எஸ் லீக் தொடருக்கான நிதி பாதியாகக் குறைப்பு

1 mins read

சிங்கப்பூரின் எஸ் லீக் காற்பந்து தொடருக்கான நிதி ஆதரவு கிட்டத்தட்ட பாதியாகக் குறைக்கப்படவுள்ளது. ஏற்கெனவே கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு முன்னர் உள்ளூர் காற்பந்துக் குழுக்கள் இயக்கும் 'ஜாக்பாட்' சூதாட்ட இயந்திரங் களை இயக்க உள்துறை அமைச்சு கட்டுப்பாடுகளை விதித்தது. இப்போது டோட் போர்ட் நிறுவனம் அடுத்த ஆண்டுக்கான எஸ் லீக் உள்ளூர் காற்பந்துப் போட்டிக்கு $8.5 மில்லியன் நிதி வழங்க முன்வந்துள்ளது. இது அந்நிறுவனம் வழங்கி வந்த $16 மில்லியன் நிதியில் பாதிதான் என்பதால் எஸ் லீக் குழுக்கள் விழி பிதுங்கி நிற்கின்றன. இது குறித்து சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்திற்கு கடந்த வாரம் தகவல் கொடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து எஸ் லீக் தொடரின் எதிர்காலத் திட்டங்கள் பற்றி சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் கலாசார, சமூக, இளையர் அமைச்சிடம் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படு கிறது. நிதிக் கட்டுப்பாட்டால் முழு நேர காற்பந்து ஆட்டக் காரர்களின் எண்ணிக்கையும் அவர்களது சம்பளமும் பாதிக்கப்படும் என்றும் அதனால் பல ஆட்டக் காரர்கள் பகுதி நேர வேலை பார்க்கும் சூழல் ஏற்படக்கூடும் என்று பல காற்பந்துக் குழுக்களின் தலைவர்கள் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கருத்து தெரிவித்திருந்தனர். கூடுதல் நிதி கிடைக்க வில்லை என்றால் நீண்ட நாள் விளைவாக சிங்கப்பூர் எஸ் லீக் காற்பந்தின் தரம் பாதிக்கப்படும் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது.