வீராங்கனை பிரியங்காவுக்கு 8 ஆண்டு தடை

வீராங்கனை பிரியங்காவுக்கு 8 ஆண்டு தடை

1 mins read
e53b6f86-978c-42fb-a178-302ff845943a
-

புதுடெல்லி: இந்திய தடகள வீராங்கனை 29 வயதான பிரியங்கா பன்வார் 2014ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார். கடந்த ஆண்டு இவர் 2வது முறையாக ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து தேசிய ஊக்கமருந்து தடுப்புக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தி திங்கட்கிழமை முடிவை அறிவித் தது. இதன்படி பிரியங்காவுக்கு 8 ஆண்டுகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2016 ஜூலை மாதத்தில் இருந்து தடை காலம் கணக்கிடப்படும்.