உலகின் முதலாவது இரவு நேர ஃபார்முலா ஒன் கார் பந்தயமான சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று எஃப்1 தலைமை நிர்வாகி சேஸ் கேரி விருப்பம் தெரிவித்துள்ளார். இவ்வாண்டுக்கான சிங்கப்பூர் கிராண்ட் பிரீ இவ்வார இறுதியில் மரினா பே பந்தயச்சுற்றில் நடை பெறவுள்ளது. தொடர்ந்து 10வது ஆண்டாக இந்தப் பந்தயம் நடை பெறுகிறது. சிங்கப்பூரில் எஃப்1 பந்தயம் நடத்தப்படுவதற்கான ஒப்பந்தம் இறுதி ஆண்டை எட்டியுள்ள நிலையில், வரும் ஆண்டுகளி லும் அப்பந்தயத்தைத் தொடர்ந்து நடத்த பேச்சுவார்த்தை இடம் பெற்று வருகிறது.
இந்நிலையில், ரிட்ஸ் கார்ல்ட் டன் ஹோட்டலில் நேற்று ஒரு கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய திரு கேரி, "புதிய உடன்பாட்டை எட்டுவதே எங்களது குறிக்கோள். இது தொடர்பாக எங்களது சிங் கப்பூர் பங்காளிகளுடன் பேசி வருகிறோம்," என்று சொன்னார். அத்துடன், சிங்கப்பூர் கிராண்ட் பிரீயையும் அவர் வானளாவப் புகழ்ந்தார். "எங்களது ஆசியக் கொள் கைகளுக்கு சிங்கப்பூர் நங்கூர மாகத் திகழ்கிறது. சிங்கப்பூர் கிராண்ட் பிரீ, ஆசியாவின் தனிச்சிறப்புமிக்க பந்தயம். நிச்சயமாக நாங்கள் பெருமை கொள்ளத்தக்க பந்தயம் இது. ஆசியாவின் நுழைவாயில்களில் ஒன்று சிங்கப்பூர். கடந்த 50 ஆண்டுகளில் நம்ப முடியாத அளவு வளர்ச்சியை எட்டியிருக் கும் சிங்கப்பூர் உலகின் கவனத் தைத் தன்பக்கம் திருப்பியிருக்கிறது," என்றார் அவர். கடந்த ஒன்பது ஆண்டுகளில் நடந்த பந்தயங்களில் செபாஸ் டியன் வெட்டல் நான்கு முறையும் ஃபெர்னாண்டோ அலோன்சோ, லூவிஸ் ஹேமில்டன் ஆகியோர் ஆளுக்கு இரு முறையும் பட்டம் வென்றனர். 2016ல் நிக்கோ ரோஸ்பர்க் பட்டத்தைக் கைப்பற் றினார்.

