மெஸ்ஸி கோல் வேட்டை

மெஸ்ஸி கோல் வேட்டை

1 mins read

பார்சிலோனா: எஸ்பேன்யால் குழுவிற்கு எதிராகக் கடந்த வார இறுதியில் நடந்த ஸ்பானிய லா லீகா காற்பந்துப் போட்டியில் 'ஹாட்ரிக்' கோல்களை அடித்த பார்சிலோனா குழுவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி தமது கோல் வேட்டையைத் தொடர்கிறார். தனது நூ காம்ப் அரங்கில் நேற்று அதிகாலை நடந்த சாம்பி யன்ஸ் லீக் ஆட்டத்தில் பார்சி லோனா 3=0 என்ற கோல் கணக் கில் இத்தாலி வெற்றியாளரான யுவென்டஸ் குழுவைத் தோற்கடித் தது.

முற்பாதி ஆட்டம் முடியும் தறு வாயில் அற்புதமாக கோல் அடித்து பார்சிலோனாவை முன்னிலை பெறச் செய்த மெஸ்ஸி, இரண்டாம் பாதியிலும் தன் பங்குக்கு ஒரு கோலைப் போட்டார். சாம்பியன்ஸ் லீக்கில் யுவென் டஸ் கோல்காப்பாளர் கியன்லுய்கி புஃபானின் தடுப்பை மீறி மெஸ்ஸி கோலடித்திருப்பது இதுவே முதல் முறை. பார்சிலோனா சார்பில் விழுந்த இன்னொரு கோலை இவான் ரகிட்டிச் அடித்தார். கடந்த பருவ சாம்பியன்ஸ் லீக்கில் காலிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் இதே கோல் வித்தியாசத்தில் யுவென் டஸ், பார்சிலோனாவை வெற்றி கொண்டது நினைவுகூரத்தக்கது.