டி20: பாகிஸ்தான் வெற்றித் தொடக்கம்

டி20: பாகிஸ்தான் வெற்றித் தொடக்கம்

1 mins read

லாகூர்: 2009ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியினர் சென்ற பேருந்துமீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் எழுவர் காயம் அடைந்தனர். இதையடுத்து, எந்த ஒரு வெளிநாட்டு அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடத் தயாராக இல்லை. இந்நிலையில், மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்க அணித் தலைவர் டு பிளஸ்ஸி தலைமையிலான அனைத்துலக அணி அங்கு சென்றுள்ளது.

நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில், முதலில் பந்தடித்த பாக். அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 197 ஓட்டங்களைக் குவித்தது. பெரிய இலக்கை விரட்டிய அனைத்துலக அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்களை மட்டும் எடுத்து 20 ஓட்ட வித்தியாசத்தில் தோற்றது.