புதுடெல்லி: ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தைவிட இந்திய வீரர் விராத் கோஹ்லி நன்றாக விளையாடுவார் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிளார்க். இந்தியாவிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஆஸ்தி ரேலியா அணி ஐந்து ஒருநாள், மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இந்நிலையில் பேசிய கிளார்க், "டெஸ்ட் போட்டிகளில் விராத் கோஹ்லியைவிட ஸ்மித் நன்றாக விளையாடுவார். ஆனால் ஒரு நாள் போட்டிகளில் கோஹ்லி சிறந்த வீரர். "இருப்பினும் ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடி உள்ளதால் இந்தியாவுக்கு எதி ரான ஒருநாள் போட்டித் தொடர் ஆஸ்திரேலிய அணிக்குச் சாதக மாக இருக்கும்," என்றார்.
'ஸ்மித்தைவிட கோஹ்லி நன்றாக விளையாடுவார்'
1 mins read

