ஸ்பர்சை காப்பாற்றிய ஹேரி கேன்

ஸ்பர்சை காப்பாற்றிய ஹேரி கேன்

1 mins read

வெம்பிளே: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடரின் ஆட்டம் ஒன்றில் பொருசியா டோர்ட்மண்ட் குழுவை 3=1 என வீழ்த்தியது டோட்டஹ்ம் ஹாட்ஸ்பர். ஹேரி கேன் போட்ட இரட்டை கோல்கள் பெற்று தந்த இந்த வெற்றியால் வெம்பிளே மைதானத் தில் தான் பெற்று வந்த தொடர் தோல்வியை முடிவுக்கு கொண்டு வந்தது ஸ்பர்ஸ். சன் ஹியூங் மின் ஐந்தாவது நிமிடத்தில் புகுத்திய முதல் கோலை 11வது நிமிடத்திலேயே சமன் செய்து எதிரணியை மிரள வைத்தது டோர்ட்மண்ட். ஆனால் அடுத்த நான்கு நிமிடத்திலேயே ஹேரி கேன் ஸ்பர்ஸ் குழுவிற்கான தனது முதல் கோலைப் புகுத்தினார்.

அதன்பிறகு 60வது நிமிடத்தில் ஹேரி கேன் தனது இரண்டாவது கோலைப் புகுத்தியதால் 3-1 என முன்னிலை பெற்ற ஸ்பர்ஸ் நிம்மதி பெருமூச்சு விட்டது. காயம் பட்டதற்கான கூடுதல் நேரத்தின்போது டோர்ட்மண்ட் குழுவின் மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய மரியோ காட்ஜிவிடம் தவறாக நடந்துகொண்டதால் ஸ்பர்ஸ் ஆட்டக்காரர் ஜேன் வெர் டொங்கனுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதற்கிடையே, அபுமயாங் உதைத்த பந்து கோல் வலைக்குள் சென்றாலும் நடுவர்கள் அதனைக் கோலாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது இந்தக் கோலை நடுவர் கள் நிராகரித்தது சரியல்ல என் கிறார்கள் ரசிகர்கள். இந்த வெற்றியின் மூலம் 'ஹெச்' பிரிவு பட்டியலில் இரண் டாவது இடத்தில் உள்ளது ஸ்பர்ஸ் குழு.