காற்பந்து: புத்துயிர் பெற்ற ஆர்சனல்; ஏமாற்றம் தந்த எவர்ட்டன்

காற்பந்து: புத்துயிர் பெற்ற ஆர்சனல்; ஏமாற்றம் தந்த எவர்ட்டன்

1 mins read

லண்டன்: யூரோப்பா லீக் காற்பந்து போட்டி ஒன்றில் நேற்று அதிகாலை சொந்த மைதானத்தில் இத்தாலிய குழுவான எஃப்சி கோலோனை எதிர்கொண்ட ஆர்சனல் ஆட்டம் தொடங்கிய ஒன்பதாவது நிமிடத் திலேயே எதிரணியினரை கோல் போட விட்டு திக்குமுக்காடியது. எஃப்சி கோலோன் ரசிகர் களில் பலர் டிக்கெட் வாங்காமல் மைதானத்துக்குள் நுழைந்ததால் அவர்களுக்கும் பாதுகாப்பு அதி காரிகளுக்கும் இடையே கைகலப்பு மூண்டது. இதனால் நேற்றைய ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. எஃப்சி கோலோன் குழு போட்ட கோலுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் முதல் பாதி ஆட்டம் முழுவதும் ஆர்சனல் திணறியது. முதல் பாதி ஆட்டம் முடியும் தறுவாயில் ஆர்சனல் வீரர்களை நோக்கி ரசிகர்கள் கேலியாகக் கூச்சலிட்டனர்.

ஆனால், இரண்டாம் பாதி ஆடடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய கொலாசனிச் ஆர்சனலுக்கான முதல் கோலை ஆட்டத்தின் 49ஆம் நிமிடத்தில் போட்டார். அதைத் தொடர்ந்து ஆட்டத் தின் 67ஆம் நிமிடத்தில் ஆர்சன லின் அலெக்சிஸ் சாஞ்செஸ் கோல் எல்லைக்கு அப்பால் கிடைத்த பந்தை எஃப்சி கோலோன் கோல்காப்பாளரின் கைகளுக்கு எட்டாத வகையில் வலைக்குள் புகுத்தி ஆர்சனலின் இரண்டாவது கோலைப் போட்டார். பின்னர் ஆட்டத்தின் 81ஆம் நிமிடத்தில் பெலரின் ஆர்சனலின் மூன்றாவது கோலை போட்டு வெற்றியை நிறைவு செய்ததாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.