லாகூர்: உலக லெவன் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. இந்தத் தொடர் பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்புக்கு இடையே நடைபெற்றது. முதல் இரண்டு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றன. கடைசி போட்டியில் பாகிஸ் தான் 20 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ஓட்டங்கள் குவித்தது. சோயப் மாலிக் 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். உலக லெவன் அணியின் திசர பெரேரா இரண்டு விக்கெட்டுகளைச் சாய்த்தார். 184 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உலக லெவன் அணி களமிறங்கியது. ஆனால் 20 ஓவர்கள் முடிவில் உலக லெவன் அணி எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2=1 எனும் கணக்கில் தொடரை வென்றது.
உலக லெவன் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் விக்கெட்டைச் சாய்த்து ஹசிம் ஆம்லாவை வெளியேற்றுகிறார் பாகிஸ்தானின் ஹசன் அலி (இடது). படம்: ஏஎஃப்பி இறுதிப் போட்டியில் சிந்து சோல்: கொரியப் பொது விருது பூப்பந்துப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். அரை இறுதியில் இந்தியா வின் முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து சீனாவைச் சேர்ந்த பிங் ஜியாவை எதிர்கொண்டார். சிந்துவிற்கு சீன வீராங்கனை பிங் ஜியா கடும் சவாலாக விளங்கினார். முதல் செட்டில் சிந்து 21 -10 எனும் புள்ளிக் கணக்கில் எளி தாக வென்றார். இரண்டாவது செட்டை சீன விராங்கனை 21 -17 எனும் செட் கணக்கில் வென்றார். மூன்றாவது செட்டில் சிந்து 21-16 எனும் புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று 2-1 என அரை இறுதியில் வாகை சூடி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

