மொரின்யோ: போக்பா இல்லாமலும் சமாளிப்போம்

மொரின்யோ: போக்பா இல்லாமலும் சமாளிப்போம்

1 mins read

லண்டன்: கடந்த செவ்வாய்க் கிழமையன்று சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் பெசலுக்கு எதிரான ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் பால் போக்பா காயமடைந்தார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த ஒரு மாதத் திலிருந்து ஆறு வாரங்களுக்கு அவரால் களமிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி பட்டியலில் முன்னிலை வகித்து வரும் யுனைடெட்டுக்கு இது ஒரு பின்னடைவாக அமையும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால் யுனைடெட்டின் நிர்வாகியான ஜோசே மொரின்யோ இந்தக் கருத்தை ஏற்க மறுக்கிறார்.

போக்பா இல்லாமலும் யுனை டெட்டால் சமாளிக்க முடியும் என்று அவர் உறுதியாகக் கூறு கிறார். மத்தியத் திடல் ஆட்டக்காரரான போக்பா யுனைடெட்டின் முதுகெலும்பாகத் திகழ்கிறார். அவருக்குப் பதிலாகக் களமிறங்கி யுனைடெட்டின் மத்தியத் திடல் ஆட்டத்தை வலுப்படுத்த தம்மிடம் பல வீரர்கள் உள்ளனர் என்று மொரின்யோ தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்றிரவு நடைபெறும் ஆட்டத்தில் யுனை டெட் எவர்ட்டனுடன் மோதுகிறது. யுனைடெட்டை விட்டுச் சென்று எவர்ட்டனுடன் இணைந்த வெயின் ரூனி இன்றிரவு முதல்முறையாக யுனைடெட்டின் ஓல்டு டிராஃபர்ட் விளையாட்டரங்கத்துக்கு வருகி றார். யுனைடெட் ரசிகர்கள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பும் ஆட்டம் முடிந்த பிறகும் ரூனிக்குத் தகுந்த மரியாதையைத் தருவர் என்று மொரின்யோ கூறினார்.