சென்னை: இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் நான்காவது ஓவரில் ஆஸ்திரேலிய பவுலர் நாதன் கோல்டர், ரகானேவை வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராத் கோஹ்லி மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோரை டக் அவுட் ஆக்கி வெளியேற்றி சென்னை ரசிகர்களை அதிர்ச்சி யில் ஆழ்த்தினார் நாதன் கோல்டர். இறுதியில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 281 ஓட்டங்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் கோல்டர் 3 விக்கெட்டுகளும் ஸ்டோனிஸ் 2 விக்கெட்டுகளும் சம்பா, பக்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து ஆஸ்திரேலிய 282 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு விளையாடி வருகிறது.
ஆஸி.க்கு 282 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
1 mins read

