சொந்த மண்ணில் ஸ்பர்ஸுக்குப் பின்னடைவு

சொந்த மண்ணில் ஸ்பர்ஸுக்குப் பின்னடைவு

2 mins read
8c8409d5-1d25-4965-b03d-f8723c07b4c0
-

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் சொந்த மைதா னத்தில் விளையாடிய 30 போட்டிகளில் முதல் முறையாக டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு வுக்குப் பின்னடைவு ஏற்பட் டுள்ளது. நேற்று அதிகாலை ஸ்பர்ஸ் குழு தனது தற்காலிக மைதான மான வெம்பிளியில் சுவான்சி குழுவை எதிர்கொண்டது. கடந்த புதன்கிழமை சாம்பி யன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் ஜெர்மனியின் பொருசியா டோர்ட் மண்ட் குழுவை பதம் பார்த்த ஸ்பர்ஸ் குழு சுவான்சியை எளிதில் வெல்லும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், ஆட்டத்தின் பெரும் பகுதி நேரம் பந்தை தன்வசம் வைத்திருந்ததுடன் எதிரணியின் கோல் கம்பத்தை நோக்கி 26 முறை பந்தை உதைத்தபோதும் ஸ்பர்ஸ் குழுவால் சுவான்சியை வெற்றிகொள்ள முடியாமல் ஆட் டம் 0-0 என சமநிலையில் முடிந்தது. இதில் ஆட்டத்தின் 58ஆம் நிமிடத்தில் கோல் போட தமக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பை ஸ்பர்ஸின் தாக்குதல் வீரரான ஹேரி கேன் வீணடித்தார். கோல் கம்பத்துக்கு மிக அருகில் இருந்து பந்தை பெற்ற அவர் அதை கோல் கம்பத்துக்கு மேலே செலுத்தி பொன்னான வாய்ப்பை தவற விட்டார். இதேபோல் அடுத்த ஏழு நிமிடங்கள் கழித்து கிடைத்த மற்றொரு வாய்ப்பை சுவான்சியின் கோல்காப்பாளர் தடுத்து ஸ்பர்ஸுக்கு மீண்டும் ஏமாற்றத் தைத் தந்தார்.

நேற்றைய போட்டியில் ஸ்பர்ஸ் குழுவின் தாக்குதலை எதிர்கொண்டு பந்தை மிக லாவகமாக கோல் கம்பத்திற்கு மேலே திருப்பிவிடும் சுவான்சி குழுவின் கோல்காப்பாளரும் ஆட்டநாயகனுமான லுக்கஸ் ஃபேபியான்ஸ்கி. படம்: ஏஎஃப்பி