எவர்ட்டனை வீழ்த்திய லுகாகுவின் கோல்; முதலிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட்

எவர்ட்டனை வீழ்த்திய லுகாகுவின் கோல்; முதலிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட்

1 mins read

ஓல்ட் டிரஃபோர்ட்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துத் தொடரில் எவர்ட்டன் குழுவை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது மான்செஸ்டர் யுனை டெட். இதன் மூலம் பட்டியலில் முன்னேறிய மேன்யூ, மான்செஸ்டர் சிட்டியுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது. எவர்ட்டன் முன்னாள் வீரர் ரொமேலு லுகாகு இப்போட்டியிலும் மேன்யூவிற்கான தனது கோலைப் போட்டார். ஆனால், மேன்யூவின் முன் னாள் வீரர் வெய்ன் ரூனி, நன் றாக விளையாடினாலும் எவர்ட் டனுக்காக அவர் புகுத்திய கோல் வீணானது. ஆட்டம் தொடங்கிய நான் காவது நிமிடத்திலேயே முதல் கோலைப் போட்டு மேன்யூவிற்கு முன்னிலை பெற்றுத் தந்தார் அன்டானியோ வெலன்சியா. அதன்பிறகு நீண்ட நேரம் கோல் எதுவும் விழாத நிலையில், ஆட்டம் முடிய எட்டு நிமிடங்களே இருந்தபோது ரூனிக்குப் பதிலாக மாற்று ஆட்டக்காரரைக் களமிறக் கினார் எவர்ட்டன் நிர்வாகி. இதற்கிடையே, ரூனி புகுத்திய கோலை மேன்யூ கோல் காப்பாளர் டேவிட் டி குவா, தடுத்துவிட எவர்ட்டனின் கோலை எண் ணிக்கை பூஜ்ஜியமாகவே இருந் தது. ரூனி ஆட்டத்தில் இருந்து வெளியேறிய பின், கடைசி நிமி டங்களில் கோல் மழை பொழியத் தொடங்கியது மான்செஸ்டர் யுனைடெட்.