'இனிவரும் போட்டிகள் கடுமையாக இருக்கும்'

'இனிவரும் போட்டிகள் கடுமையாக இருக்கும்'

1 mins read
2ccf9b04-0caf-4d1b-b0c2-bfc1aa460860
-

சிங்கப்பூர்: சிங்கப்பூர் எஃப்1 கார் பந்தயத்தின் போது செபாஸ்டியன் வெட்டல், கிமி ரைக்கோனென் ஆகியோரின் ஃபெராரி கார்கள் சேதமடைந்தன. எனவே அடுத்து வரும் சுற்று களில், ஃபெராரி குழுவின் பதிலடி கடுமையாக இருக்கும் என்று தான் எண்ணுவதாகக் கூறியுள்ளார் போட்டியின் வெற்றி யாளர் லூவிஸ் ஹேமில்டன். இன்னும் ஆறு சுற்றுகள் எஞ்சியுள்ள நிலையில், பட்டத்தை வெல்வதற்கான பயணம் இன் னும் நீண்ட தூரம் உள்ளது என்றும் அவர் சொன்னார். கடைசி மூன்று சுற்றுகளில் வெற்றி பெற்ற ஹேமில்டன், "என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே யூகிப்பது கடினம். "ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுகளில் நடக்கவுள்ள கார் பந்தயங்களில் ஃபெராரி வலுவான நிலையில் இருக்கும்," என்றார். பந்தயத்தை ஐந்தாம் நிலையில் இருந்து துவங்கிய ஹேமில்டன் வெற்றியாளர் பட்டம் சூடிய நிலை யில், நான்கு முறை சிங்கப்பூர் எஃப்1 பட்டத்தை வென்ற வெட் டல் முதல் சுற்றிலேயே வெளி யேறினார். மலேசிய கிராண்ட் பிரி கார் பந்தயம் அடுத்த வாரம் தொடங்கு கிறது.

சிங்கப்பூர் எஃப்1 கார் பந்தயத்தை வென்ற களிப்பில் மெர்சிடிஸ் வீரர் லூவிஸ் ஹேமில்டன். படம்: ஏஎஃப்பி