கோலாலம்பூர்: ஆசியான் உடற் குறையுள்ளோருக்கான விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூருக் கான முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் நீச்சல் வீரர் தோ வி சூங். கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இப்போட்டிகளில் கலந்து கொண்ட 19 வயது சிங்கப்பூர் வீரரான தோ வி சூங், 100 மீட்டர் 'எஸ்7' பிரிவில் எதேச்சைபாணி நீச்சலில் தங்கம் வென்றார். இவர் பந்தய தூரத்தை 1 நிமிடம் 7.53 விநாடிகளில் கடந்தார். 1 நிமிடம் 14.89 விநாடிகளில் கடந்த தாய்லாந்து வீரர் இரண்டாவது இடத்தையும் அவரைவிட கிட்டதட்ட 3 நிமி டங்கள் பின்தங்கிய இந்தோனீசிய வீரர் 3வது இடத்தையும் பிடித்த னர். இதே போட்டியின் 'எஸ்6' பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென் றார் மற்றோர் சிங்கப்பூர் வீராங் கனை தெரேசா கோ. ஆசியான் உ ட ற் கு றை யு ள் ளோ ரு க் கா ன போட்டியில் இவர் இதுவரை 29 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
சிங்கப்பூருக்கு முதல் தங்கம்
1 mins read

