மான்செஸ்டர்: மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட இங்கிலாந்து காற்பந்து அணியின் முன்னாள் தலைவர் வெயின் ரூனி (படம்), வாகனம் ஓட்ட இரண்டு காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1ஆம் தேதி அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு கார் ஓட்டியதாகக் கைது செய்யப் பட்ட ரூனி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், உடனடியாக அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் முன்னிலையான வெயின் ரூனி தனது தவற்றை ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து அவருக்கு வாகனம் ஓட்ட 2 ஆண்டுகள் தடை விதித்து நீதிமன்றம் உத்தர விட்டது. அத்துடன் அடுத்த 12 மாதங்களுக்குள் அவர் 100 மணி நேரம் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்றும் அறி வுறுத்தப்பட்டது.
வாகனம் ஓட்ட ரூனிக்கு இரண்டு ஆண்டு தடை
1 mins read
-

