சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்துவதே குறிக்கோளாக இருந்தது என்று கூறியுள்ளார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹல். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, அணி யின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த இடது கை சுழற்பந்து வீச்சாளரான யுசுவேந்திர சஹல், "மணிக்கட்டை அதிகம் பயன் படுத்தி பந்து வீசும் சுழற்பந்து வீச் சாளர்கள் பெரும்பாலும் தாக்குதல் ஆட்டத்தைத்தான் தொடுப்பார் கள்.
"அதிலும் அணித் தலைவர் ஆக்ரோஷமாக செயல்படுபவராக இருந்தால் வீரர்களும் சுதந்திரமாக அதிக தாக்குதல் ஆட்டத்தைப் பின்பற்றுவார்கள். "கோஹ்லி ஆக்ரோஷ ஆட்ட முறையைக் கடைப்பிடிப்பதால் எங் களால் அதிக தாக்குதல் ஆட் டத்தை வெளிப்படுத்த முடிகிறது. "நானும் குல்தீப் யாதவும் தாக்குதல் ஆட்ட முறையைக் கடைப்பிடிப்பவர்கள். ஆட்டத்தின் சூழ்நிலைக்கு தகுந்தபடி எங்களது தாக்குதல் ஆட்டம் இருக்கும். "மேக்ஸ்வெல் எப்படி காலை நகர்த்துகிறார் என்பதைப் பார்த்து அதற்கு ஏற்ப பந்து வீசும்படி கோஹ்லியும் டோனியும் அறிவுறுத் தினார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மேக்ஸ்வெல் விக்கெட்டை கைப்பற்றிய இந்திய வீரர் யுஸ்வேந்திர சஹலைப் பாராட்டும் அணித் தலைவர் கோஹ்லி. படம்: ராய்ட்டர்ஸ்

