லெஸ்டர்: இஎஃப்எல் கிண்ணக் காற்பந்துத் தொட ரில் லிவர்பூல் குழுவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது லெஸ்டர் சிட்டி. முதல் பாதி ஆட்டம் முழுவதும் லிவர்பூல் ஆதிக்கம் செலுத்தினாலும் அக்குழுவால் கோல் எதுவும் போட முடியவில்லை. லெஸ்டர் குழுவும் முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் போடாத நிலையில், அக்குழுவின் மாற்று ஆட்டக் காரராக களமிறங்கினார் ஒகசாகி. இதனால் ஆட்டத்தின் போக்கு மாறியது. 65வது நிமிடத்தில் ஒகசாகி கோல் போட முன்னிலை பெற்றது லெஸ்டர் குழு. அதன் பிறகு இஸ்லாம் ஸ்லிமனி 78வது நிமிடத்தில் அடுத்தக் கோலைப் புகுத்த 2 கோல்கள் முன்னிலையில் லெஸ்டர் வெற்றி பெற்றது. இதற்கிடையே லிவர்பூல் ஆட்டக்காரர்கள் கோல் போடுவதற்கான இரண்டு பொன்னான வாய்ப்புகளைத் தவற விட்டனர். மற்ற ஆட்டங்களில் கிறிஸ்டல் பேலஸ் ஹடர்ஸ் ஃபீல்ட் குழுவை வீழ்த்தியது. இதற்கிடையே இன்னோர் ஆட்டத்தில் பர்ன்ஸ்லீ குழுவை எதிர்கொண்ட டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு 1=0 என்ற கோல் கணக்கில் போராடி வெற்றி பெற்றது.
லிவர்பூல் குழுவை 2-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது லெஸ்டர் சிட்டி. படம்: ராய்ட்டர்ஸ்

