நெஞ்சு நீச்சலில் தங்கம் வென்றார் சிங்கப்பூர் வீராங்கனை தெரேசா கோ

நெஞ்சு நீச்சலில் தங்கம் வென்றார் சிங்கப்பூர் வீராங்கனை தெரேசா கோ

1 mins read
6e969038-4989-46e9-9492-b85850012396
-

கோலாலம்பூர்: ஆசியான் உடற் குறையுள்ளோருக்கான விளை யாட்டுப் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை தெரேசா கோ தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 'எஸ்பி4' பிரிவில் 100 மீட்டர் நெஞ்சு நீச்சல் போட்டியில் பந்தய தூரத்தை 2 நிமிடம் 4.16 விநாடி களில் கடந்து தங்கம் வென்றார் 30 வயது தெரேசா கோ. இதன் மூலம் ஆசியான் உடற் குறையுள்ளோருக்கான போட்டிக ளில் இதுவரை 30 தங்கப் பதக் கங்களை வென்றுள்ளார் இவர். வியட்னாம் இரண்டாவது இடத்தையும் தாய்லாந்து மூன்றா வது இடத்தையும் பிடித்தது. வரும் 30ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள உடற்குறை யுள்ளோருக்கான உலக நீச்சல் வெற்றியாளர் போட்டியிலும் பங் கேற்க அவர் தயாராகி வருகிறார். இதற்கிடையே உருட்டுப் பந்து விளையாட்டிலும் சிங்கப்பூர் வீரர் முகமது ஃபர்ஹான் இஸ்மாயில் தங்கம் வென்றுள்ளார்.

தனது முப்பதாவது வயதில் 30வது தங்கப் பதக்கத்தை வென்றார் தெரேசா கோ. படம்: ஸ்போர்ட் சிங்கப்பூர்