சிந்து, சாய்னா வெளியேற்றம்

சிந்து, சாய்னா வெளியேற்றம்

1 mins read
0834cd58-75e4-4e59-9d2c-e15036831159
-

தோக்கியோ: ஜப்பான் பொது விருது பேட்மிண்டன் தொடரில் முன்னணி இந்திய வீராங்கனைகளான பி.வி.சிந்துவும் சாய்னா நேவாலும் தோற்று வெளியேறினர். கடந்த வாரம் கொரிய ஓப்பன் இறுதிப் போட்டியில் சிந்துவிடம் பட்டத்தை இழந்ததற்கு சொந்த மண்ணில் வைத்துப் பழிதீர்த்தார் ஜப்பானிய வீராங்கனை நொஸொ„மி ஒக்குஹாரா. காலிறுதிக்கு முந்திய சுற்றில் அவர் 21-18, 21-8 என்ற செட்களில் சிந்துவை வீழ்த்தினார். ஸ்பெயினின் கரோலினா மரின் 21-16, 21-13 என்ற செட்களில் சாய்னாவைத் தோற்கடித்தார். ஆயினும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்தும் ஹெச்.எஸ். பிரணோயும் தங்களது ஆட்டங்களில் வென்று காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.