ரொனால்டோ இருந்தும் தோல்வி கண்ட ரியால்

ரொனால்டோ இருந்தும் தோல்வி கண்ட ரியால்

1 mins read
c4c863dd-2caf-4f82-8d51-e7a9fc5b7223
-

மட்ரிட்: ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் அன்டோனியோ சனப்ரியா கோலடிக்க, ரியால் பெட்டிஸ் காற்பந்துக் குழு 1=0 என்ற கணக்கில் ஸ்பானிய காற்பந்து லீக்கின் நடப்பு வெற்றியாளரான ரியால் மட்ரிட்டுக்கு அதிர்ச்சித் தோல்வி அளித்தது. ரியால் குழு கடைசியாகத் தான் ஆடிய 74 ஆட்டங்களில் ஒரு கோல்கூட அடிக்க முடியாமல் போனது இதுவே முதல்முறை. ஐந்து ஆட்டங்கள் தடைக்குப் பின் கிறிஸ்டியானோ ரொனால்டோ களத்திற்குத் திரும்பியும் ரியால் குழுவால் கோலடிக்க முடியாமல் போனது பெரும் சோகம்.