கோலாலம்பூரில் நடந்து வரும் உடற்குறையுள்ளோருக்கான ஆசியான் பாரா விளையாட்டுகளில் சிங்கப்பூர் வீராங்கனை நூர் சியாஹிடா ஆலிம், 32, 'தனிநபர் காம்பவுண்ட்' அம்பெய்தல் போட்டியில் தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இறுதிப் போட்டியில் இவர் மலேசியாவின் நோர் சாடா அப்துல் வஹாப்பை 140-=132 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தார். முன்னதாக, சிங்கப்பூர் நீச்சல் வீரரான டோ வெய் சூங் நேற்று தமது 2வது தங்கத்தைக் கைப்பற்றினார். S7 50 மீட்டர் எதேச்சைபாணி நீச்சலில் 29.79 வினாடிகள் என்ற புதிய சாதனை நேரத்துடன் தங்கம் வென்ற 19 வயதான டோ, கடந்த திங்கட்கிழமை S7 100 மீ. எதேச்சைபாணிப் பிரிவிலும் தங்கத்தைத் தனதாக்கியிருந்தார். படம்: ஸ்போர்ட் சிங்கப்பூர்
தங்கத்தைத் தக்கவைத்த சிங்கப்பூர் வீராங்கனை
1 mins read
-

