நான்காம் சுற்றில் முன்னணி குழுக்கள்

நான்காம் சுற்றில் முன்னணி குழுக்கள்

1 mins read
a23c0609-e1a3-4a95-8e8d-391edcd97ff2
-

லண்டன்: செல்சி, ஆர்சனல், மான்செஸ்டர் யுனைடெட், மான் செஸ்டர் சிட்டி, எவர்ட்டன் ஆகிய முன்னணி காற்பந்துக் குழுக்கள் இங்கிலிஷ் லீக் கிண்ணத்தின் நான்காம் சுற்றுக்கு முன்னேறின. நடப்பு வெற்றியாளரான யுனை டெட் இரண்டாம் நிலைப் போட்டி களில் விளையாடி வரும் பர்ட்டன் அல்பியன் குழுவை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. அக் குழுவின் இளம் ஆட்டக்காரர் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் இரண்டு கோல்களையும் ஜெஸி லிங்கார்ட், ஆன்டனி மார்சியால் ஆகியோர் ஆளுக்கு ஒரு கோலையும் அடித் தனர். மிச்சி பட்‌ஷுவாயி 'ஹாட்ரிக்' கோலடிக்க, ஸ்டாம்பர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடந்த ஆட்டத்தில் செல்சி குழு 5-1 என்ற கணக்கில் நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் குழுவைத் துவைத்தெடுத்தது.

பர்ட்டன் அல்பியன் குழுவிற்கு எதிரான இங்கிலிஷ் லீக் கிண்ண மூன்றாம் சுற்று ஆட்டத்தில் தனது முதல் கோலை அடிக்கும் மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் (இடது). படம்: ஏஎஃப்பி