புதுடெல்லி: கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகளை லோதா குழுவின் பரிந்துரைக் கேற்ப மாற்றியமைத்து அதன் வரைவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. ஆனால் எவ்விதக் கருத்தும் சொல்லாமல் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் இழுத்தடித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளடங்கிய குழுவினர் கிரிக்கெட் வாரியத்- தின் பொறுப்புத் தலைவர் சி.கே.கண்ணா உள்ளிட்ட நிர்வாகிகளுக்குக் கண்டனம் தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் வாரியம் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தனர்.2017-09-23 06:00:00 +0800
கிரிக்கெட் நிர்வாகிகளுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
1 mins read

