ஆசியான் பாரா விளையாட்டு: தங்கம் வென்றார் சீ

ஆசியான் பாரா விளையாட்டு: தங்கம் வென்றார் சீ

2 mins read
7707c4c0-795f-4498-8159-8764d3e4c7b1
-

கோலாலம்பூர்: மலேசியாவில் நடந்து வரும் ஆசியான் பாரா விளையாட்டுகளில் சிங்கப்பூரின் ஜேசன் சீ, ஒற்றையர் மேசைப் பந்து விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். கோலாலம்பூரில் நடந்த அந்த ஆட்டத்தில் 34 வயது ஜேசன், ஐந்து பேர் சுற்று கொண்ட ஆட்டத் தில் தொடர்ந்து மூன்று பேரைத் தோற்கடித்து நான்காவதாக திரயு சுயேவோங் என்பவரை 11-8, 11-2, 12-10 ஆகிய புள்ளிக் கணக்கில் தோற்கடித்து தங்கத் தைத் தட்டிச் சென்றார். முன்னதாக தாய்லாந்தின் தினத்தெட் நத்தவுட் என்பவரை 11-8, 11-7, 5-11, 11-9 என்ற புள்ளிக் கணக்கிலும் சிங்கப்பூரின் எரிக் டிங்கை 11-6, 11-8, 11-5 என்ற புள்ளிக் கணக்கிலும் டேரன் சுவாவை 11-4, 11-7, 11-6 என்ற புள்ளிக் கணக்கிலும் சீ தோற்கடித் தார். ஜேசன் பெற்ற இரண்டாவது பதக்கம் இது. சென்ற புதன்கிழமை நடந்த ஆண்கள் குழுவுக்கான போட்டியில் வெண்கலப் பதக் கத்தை அவர் வென்றார்.

சென்ற ஆண்டு மியன்மாரில் நடந்த ஆசியான் பாரா விளையாட்டுப் போட்டியில் ஜேசன், ஒற் றையர் மேசைப் பந்துப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் குழு வாக மோதிய போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றார். கண் புற்றுநோயால் பாதிக்கப் பட்ட ஜேசன், தனது வலது கண் பார்வையை இழந்தார். ஏற்கெனவே 2012ல் சிங்கப்பூர் கடற்படையின் போர்க்கப்பலில் வேலை செய்து கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் தனது இரண்டு கால்களையும் இடது கையையும் இழந்தார். அத்துடன் வலது கையின் மூன்று விரல்களையும் இழந்தார்.

சிங்கப்பூரின் மேசைப் பந்தாட்ட வீரர் ஜேசன் சீ. படம்: ஸ்போர்ட்ஸ் சிங்கப்பூர்