புதுடெல்லி: ரஞ்சி கிரிக்கெட் கிண்ணத்திற்கான டெல்லியின் அணித் தலைவர் பதவியில் இருந்து கௌதம் கம்பீர் விலகிய தையடுத்து, இந்திய டெஸ்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா அந்த அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கம்பீர் அணியில் தொடர்ந்து நீடிப்பார் எனவும் தகவல்கள் தெரி விக்கின்றன. இதுபற்றி பேசிய டெல்லி அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் கள், "கம்பீர் கடந்த 4 ஆண்டு களாக அணியை வழிநடத்தி வரு கிறார். "கம்பீர் அணித் தலைவர் பதவியில் இருந்து தனக்கு ஓய்வு வேண்டும் என்று விரும்பினார். அணியின் வீரராக இருந்து அதிக ஓட்டங்களைக் குவிக்கவும் அவர் விரும்புகிறார். "இசாந்த் சர்மாவிற்கு அணித் தலைவர் அனுபவம் இல்லையென்றாலும் அவர் அதிக அனைத்துலக போட்டிகளில் விளையாடியுள்ளார். "கம்பீர், பயிற்சியாளர் கே.பி.பாஸ்கர் அவருக்கு உதவியாக இருப்பார்கள்," எனக் கூறினார்.
கடந்த ஆண்டு ரஞ்சிக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெற முடியாமல் டெல்லி அணி தடுமாறியது. அதன் பிறகு ரிஷப் பந்த் ஒரு சில போட்டிகளுக்கு அணித் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், தற்போது ரிஷப் பந்த அனைத்துலகப் போட்டி களில் விளையாட வேண்டியுள்ள தால், தலைவராக இஷாந்த் சர் மா தேர்ந்தெடுக்கப்பட்டு உள் ளார். இந்த ஆண்டு ரஞ்சிக் கிண் ணத் தொடர் வரும் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி தொடங்கு கிறது.
டெல்லி அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இஷாந்த் சர்மா. படம்: இணையம்

