மட்ரிட்: செல்சி குழுவில் இருந்து வெளியேறும்விதம் தனக்கு வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று கூறி உள்ளார் காற்பந்து வீரர் டியேகோ கோஸ்டா. கோஸ்டாவை குழுவில் இருந்து விடுவிப்பதை செல்சி உறுதி செய்த பிறகு அவர் இவ்வாறு கூறியுள்ளார். மீண்டும் அட்லெட்டிகோ மட்ரிட் குழுவிற்கே செல்லவுள்ள கோஸ்டா கடந்த 2014ஆம் ஆண்டு முதல் செல்சி குழுவிற்காக விளையாடத் தொடங்கினார். கடந்த மூன்று பருவத்திலும் செல்சிக்காக விளையாடி வந்த கோஸ்டாவிற்கும் அதன் நிர்வாகி கோண்டேவிற்கும் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து கோஸ்டா செல்சி குழு விற்காக அவர் களமிறங்கவில்லை. செல்சிக்காக கடந்த பருவத்தில் 20 பிரிமியர் லீக் ஆட்டங்களில் மட்டுமே கோஸ்டா விளையாடினார். ஜுன் மாதத்தில் கோஸ்டாவின் குழு மாறும் முயற்சி தோல்வி அடைந்ததையடுத்து வரும் ஜன வரியில் அட்லெட்டிகோ மட்ரிட் குழுவில் அவர் இணைவதற்கான கடைசி கட்ட நடவடிக்கைகளும் மருத்துவ பரிசோதனைகளும் தற் போது மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இதற்காக ஸ்பெயின் சென்று உள்ள அவருக்கு மட்ரிட் ரசிகர்கள் பலத்த வரவேற்பு அளித்தனர்.
அட்லெட்டிகோ மட்ரிட் குழுவில் இணைவதற்கான மருத்துவ பரிசோதனைகளுக்காக ஸ்பெயின் சென்றடைந்த டியேகோ கோஸ்டா. படம்: ராய்ட்டர்ஸ்

