சிறந்த விளையாட்டாளர் விருதுக்கு பரிந்துரை

சிறந்த விளையாட்டாளர் விருதுக்கு பரிந்துரை

1 mins read
9d7a59aa-a487-436d-ad4a-ffd4123a24f2
-

உலகக் காற்பந்து சம்மேளமான பிஃபாவின் சிறந்த விளையாட் டாளர் விருதுக்கு ரொனால்டோ, நெய்மார், மெஸ்ஸி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர். பார்சிலோனாவின் முன்னாள் வீரரான நெய்மார், அக்குழு 'கோப்பா டெல் ரே' கிண்ணம் வெல்ல காரணமாக இருந்தார். தற்போது இவர் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் குழுவிற்காக விளை யாடி வருகிறார். அதுபோல் பார்சிலோனாவின் மற்றோர் வீரரான மெஸ்சியும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளார். கடந்த பருவத்தில் 54 கோல்களைப் புகுத்தி இவர், ஸ்பானிய சூப்பர் கிண்ணம் வெல்லக் காரணமாக இருந்தார். இவர்களைத் தொடர்ந்து ரியால் மட்ரிட் குழு லா லீகா பட்டம் வெல்லவும் 3வது முறையாக சாம்பியன்ஸ் லீக் பட்டம் வெல்லவும் உறுதுணையாக இருந்த ரொனால் டோவும் இந்த விருதுக்கு பரிந்து ரைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டைப் போலவே, இவ்வாண்டும் ரொனால்டோ பட் டம் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

(இடமிருந்து) நெய்மார், ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோர் சிறந்த காற்பந்து விளையாட்டாளர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி