நியூகாசலை வீழ்த்தியது பிரைட்டன்

நியூகாசலை வீழ்த்தியது பிரைட்டன்

1 mins read

பிரைட்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் நியூகாசல் குழுவை வீழ்த்திய பிரைட்டன் தனது இரண்டாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஃபிரி கிக் வாய்ப்பைப் பயன்படுத்தி பாஸ்கல் கிராஸ் உதைத்த பந்தை டோமர் ஹெமிட் கோலாக மாற்றினார். இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடி யது பிரைட்டன். பிரிமியர் லீக் தொடரில் கடந்த மூன்று ஆட்டங்களாக வெற்றி பெற்று வந்த நியூகாசல் அணிக்கு இப்போட்டியிலும் கோல் போடும் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவற்றை நியூகாசல் கோலாக மாற்றாமல் தவறவிட்டுவிட்டது. நியூகாசல் வீரர் கோல் வலை நோக்கி உதைத்த பந்தை பிரைட்டன் கோல் காப்பாளர் மாட் ரயன் தடுத்துவிட்டார். இந்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலில் பிரைட்டன் 13வது இடத்திற்கு முன்னேறியது. நியூகாசல் 9வது இடத்திற்கு கீழிறங்கியது.