விளாசித் தள்ளிய மொயீன்; சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்

விளாசித் தள்ளிய மொயீன்; சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்

1 mins read
5610d5ee-aced-410c-a74c-8193d2ff4d41
-

லண்டன்: கிரிக்கெட் வீரர் மொயீன் அலி சிக்சர்களைப் பறக்கவிட வெஸ்ட் இண்டீசை சுருட்டியது இங்கிலாந்து. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய மொயீன் அலி 53 பந்துகளில் சதம் விளாசினார். ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் 2வது அதிவேக சதமாகும் இது. மொயீன் அலி 50 ஓட்டங் களில் இருந்து 100 ஓட்டங்களை எடுக்க 12 பந்துகளையே எடுத்துக்கொண்டார். மொத்தம் 8 சிக்சர், 7 பவுண் டரிகளை விளாசிய அவர் 102 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இவருக்கு முன்னதாக விளை யாடிய ஜோ ரூட் (84), பென் ஸ்டோக்ஸ் (73) ஆகியோரும் ஓட்டங்களைக் குவித்தனர். இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு 369 ஓட்டங்களைக் குவித்தது இங்கிலாந்து. வெற்றி பெற வேண்டுமானால் கடும் இலக்கை எட்ட வேண்டிய சூழ்நிலையில் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

அதிவேக சதம் விளாசிய இரண்டாவது இங்கிலாந்து வீரர் மொயீன் அலி. இவர் 57 பந்துகளில் 102 ஓட்டங்கள் எடுத்தார். படம்: இணையம்