இந்தூர்: இந்திய கிரிக்கெட் அணியின் ஹார்திக் பாண்டியா அபார திறமை கொண்டவர் என்று புகழ்ந்துள்ளார் ஆஸ்திரேலி யாவின் ஸ்டீவ் ஸ்மித். ஆஸ்திரேலியாவுடன் மோதிய மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தி யாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3-0 என தொடரையும் கைப்பற்றியது. இப்போட்டியிலும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் பாண்டியா. 72 பந்துகளைச் சந்தித்த அவர், 78 ஓட்டங்களை அள்ளி னார். தனது அணியின் தோல்வி குறித்து பேசிய ஸ்மித், "பந் தடிப்பைத் தேர்ந்தெடுத்தது சரி யான முடிவு என்று நினைத்தேன். "ஃபிஞ்ச் நன்றாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகப்படுத்தினார். "ஆனால் கடைசி ஓவர்களில் அதைத் தக்கவைத்துக்கொள்ள தவறிவிட்டோம். "வெற்றியை நெருங்கும் சமயத் தில் அதை நழுவவிடுவது என்பது எங்கள் அணிக்கு வழக்கமான ஒன்றாகிவிட்டது.
294 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47.5 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா 78 ஓட்டங்கள் எடுத்தார். படம்: இணையம்

